/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 1 லட்சம் மதிப்பில் கண் கண்ணாடி வழங்கல்
/
ரூ. 1 லட்சம் மதிப்பில் கண் கண்ணாடி வழங்கல்
ADDED : ஜன 26, 2025 05:52 AM

கடலுார் : கடலுாரில் டாக்டர் பிரவீன் அய்யப்பன், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச கண் கண்ணாடி வழங்கினார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரிலும், ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கமம் சார்பிலும் கடலுார், பெரியகங்கணாங்குப்பத்தில் சில நாட்களுக்கு முன்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமில், பங்கேற்றவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கும் விழா பெரியகங்கணாங்குப்பத்தில் நேற்று நடந்தது.
டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கி, 100 பயனாளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச கண் கண்ணாடி வழங்கினார்.விழாவில், சங்கமம் ரோட்டரி சங்கத் தலைவர் நாராயணசாமி, செயலாளர் கார்த்தீசன், பொருளாளர் ஞானசேகரன், ஆளுனர் வெங்கடேசன், முன்னாள் உதவி ஆளுனர்கள் வேல்முருகன், வெங்கடேஷ் மற்றும் சன் பிரைட் பிரகாஷ், முன்னாள் தலைவர்கள் செல்வராஜ், சூரியமூர்த்தி, விக்னேஸ்வரன், ரவிக்குமார், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் லட்சுமணன், துரை உட்பட பலர் பங்கேற்றனர்.

