ADDED : அக் 19, 2024 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம் : சிறுபாக்கம் அடுத்த மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். மங்களூர் வட்டார அட்மா குழு தலைவர் செங்குட்டுவன், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் இளையராஜா, ஆசிரியர் திருவள்ளுவன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.