/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல்
/
துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல்
ADDED : அக் 18, 2024 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட்டை மேயர் சுந்தரி ராஜா வழங்கினார்.
வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ளது. அதையொட்டி மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சி பகுதியில் மழை நேரத்தில் குப்பைகளை அள்ளுவதற்கு துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் நடந்தது.
கமிஷனர் அனு தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர சுகாதாரத்துறை நல அலுவலர் எழில்மதனா முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கினார்.