/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல்
ADDED : அக் 29, 2024 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் துாய்மைப் பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கப்பட்டது.
சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மயில்வாகணன் வரவேற்றார். துாய்மைப் பணியாளர்களுக்கு, கடலுார் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வெங்கடேசன் மழை கோட் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன், துப்புரவு ஆய்வாளர் ஜோதி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் செல்வகுமார், துப்புரவு மேற்பார்வையாளர் வீர ஆனந்தன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
தலைமை எழுத்தர் தமிழரசி நன்றி கூறினார்.