/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கல்
/
இருதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கல்
ADDED : டிச 22, 2025 05:44 AM

கடலுார்: மறைந்த தாசில்தாரின் மகள், ஏழைகள் இருதய சிகிச்சை பெறும் வகையில், கலெக்டரிடம் நிதியுதவி வழங்கினார்.
கடலுார் தேரடி தெருவை சேர்ந்த, ஆறுமுக சுந்தரம் தாசில்தாராக பணி புரிந்து கடந்த, 1996ம் ஆண்டு ஓய்வு பெற்று, பின் காலமானார்.
இவர் தனது இளைய மகள் கயல்விழிக்கு எழுதிய உயில் சாசனத்தில், நன்செய் நிலத்தில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, ரூ.50 ஆயிரத்தை தனது தாய் ரமணி அம்மாளின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், கடலுார் வட்டத்தில் இருதய நோயால் பாதிப்புக்குள்ளான ஏழைகளுக்கு உதவிடும் வகையில் வழங்கிட வேண்டும் என எழுதி வைத்துள்ளார்.
அதனடிப்படையில், கயல்விழி 50,000 ரூபாய் காசோலையை, கலெக்டர்சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் வழங்கினார்.

