/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்
ADDED : ஜன 12, 2025 06:53 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு தமிழ்மன்றம் அறக்கட்டளை சார்பில் புடையூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை அறங்காவலர் ஜெயந்தி, நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், கோபிநாதன் முன்னிலை வகித்தனர்.
பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடிய எழுது பொருட்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தேர்விற்கான அட்டவணை ஸ்டிக்கடர் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் தமிழ்மன்றம் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.