ADDED : ஆக 20, 2025 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விலையில்லா சீருடை அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பள்ளி வாரியாக விலையில்லா பாட புத்தகங்கள், சீருடை, ஷூ, காலுறை, நுாலகத்திற்கு தேவையான புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நேற்று 140 பள்ளிகளுக்கு தேவையான சீருடை உள்ளிட்ட உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
இதனை மாவட்ட கல்வி அதிகாரி துரைபாண்டியன் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் வினோத்குமார், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.