ADDED : ஆக 03, 2025 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
துணை கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, கூட்டுறவு துணை பதிவாளர் சபிதா, மங்களூர் ஒன்றிய ஆத்மா குழு தலைவர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கணேசன், பயனாளிகளுக்கு 98 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தாசில்தார் செந்தில்வேல், மங்களூர் பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முக சிகாமணி, மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம், நிர்வாகிகள் திருவள்ளுவன், ராஜசேகர், குமணன், சின்னதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.