தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

 கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

 கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : டிச 15, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: நெய்வேலி மந்தாரக்குப்பம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

நெய்வேலியில், என்.எல்.சி., இந்தியா லிமிடெட் அனல்மின் நிலையம், சுரங்கங்கள், தலைமை அலுவலகம், நிர்வாக அலுவலகம், பள்ளிகள், கல்லுாரிகள் உட்பட பல இயங்கி வருகின்றன.

இங்கு வெளி மாவட்டம் மட்டுமில்லாமல் ஒடிசா, பீகார், ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால் நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து அருகில் உள்ள மந்தாரக்குப் பம், வடலுார், இந்திராநகர், முத்தாண்டிகுப்பம், அரசக்குழி, ஊமங்கலம்,வட லுார் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பஸ்கள் மிகவும் குறைவாக உள்ளன.

அரசு போக்குவரத்துக் கழகம், என்.எல்.சி., சார்பில் நெய்வேலி டவுன்ஷிப்- மந்தாரக்குப்பம், இந்திராநகர், திடீர்குப்பம் பகுதிக்கு மிக குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் பல மணிநேரம் மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. அதனால், இந்த வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us