/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் டாஸ்மாக் கடையை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
/
பண்ருட்டியில் டாஸ்மாக் கடையை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
பண்ருட்டியில் டாஸ்மாக் கடையை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
பண்ருட்டியில் டாஸ்மாக் கடையை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
ADDED : மார் 18, 2025 04:50 AM

கடலுார், பண்ருட்டி லிங் ரோடு அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைக்கேட்புக் கூட்டத்தில் பண்ருட்டி லிங்க் ரோடு பொதுமக்கள், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில்:
பண்ருட்டி லிங்க் ரோட்டில் கடை எண் 2453 அரசு டாஸ்மாக் மதுப்பானக் கடை செயல்படுகிறது. லிங் ரோடு பிரதான சாலையாக இருப்பதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. டாஸ்மாக் கடையால் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுகிறது. லிங் ரோட்டில் குடியிருப்பு வீடுகள், பள்ளிக்கள் அரசு மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், கடைகள், பள்ளி வாசல் உள்ளன.
இந்தசாலை வழியாக பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். அரசு டாஸ்மாக் கடை இருப்பதால், மது பிரியர்கள் குடித்துவிட்டு ஆபாசமாக பேசுவதும், வீட்டு வாசல் முன்பு போதையில் மயங்கிக்கிடக்கின்றனர். இது குடியிருப்பவர்கள், மாணவிகளுக்கு அருவறுப்பாக உள்ளது.
குடி பிரியர்களின் நடவடிக்கையால் வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியில் வர அச்சம் அடைந்துள்ளனர். எனவே பல்வேறு வகையிலும் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் லிங் ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்தில் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.