/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிவாரணம் வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்
/
நிவாரணம் வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்
ADDED : டிச 09, 2024 05:00 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பத்தாம் நம்பர் ரேஷன் கடையில் நேற்று நிவாரணம் வழங்காததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் மொத்தம் 12 கடைகள் உள்ளன.ஆனால் 9 கடைகளில் மட்டுமே விற்பனையாளர்கள் பணியில் உள்ளனர். கீழ்பாதி உட்பட மூன்று கடைகளில் விற்பனையாளர் பணியிடம் காலியாக உள்ளது.
அந்த மூன்று கடைக்கும் வாரத்தில் சில நாட்கள் மட்டும் வேறு கடையில் வேலை செய்யும் விற்பனையாளர் தனது கடையை மூடிவிட்டு அந்த கடைக்கு சென்று பணியாற்றுவார்கள்.
இதனால் அனைத்து கடைகளிலும் விற்பனை பாதிக்கிறது. தற்போது தமிழக அரசின் மூலம் வெள்ளம் நிவாரணம் வழங்கும் பணி நடக்கிறது.
ஆனால் அந்த 3 கடைகளில் மட்டும் முதல் 2 நாட்கள் நிவாரணம் வழங்கவில்லை. இதனால் மக்கள் தகராறு செய்து வந்தனர்.
இந்நிலையி,ல் நேற்று 10 நம்பர் கடை உட்பட மூன்று கடைகளின் விற்பனையாளர்களை விற்பனையாளர்கள் இல்லாத கடைகளுக்கு அனுப்பி நிவாரணம் வழங்கினர்.
இதனால் விற்பனையாளர்கள் பணியில் இருக்கும் மூன்று கடைகள் நேற்று மூடப்பட்டன.
இதையறியாத ஏராளமான மக்கள் நிவாரணம் பெற வந்து கடை மூடியிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.