தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கலங்கலாக வரும் குடிநீர் பொதுமக்கள் அதிருப்தி

கலங்கலாக வரும் குடிநீர் பொதுமக்கள் அதிருப்தி

கலங்கலாக வரும் குடிநீர் பொதுமக்கள் அதிருப்தி


ADDED : அக் 08, 2024 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 02:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் குடிநீர் கலங்கலாக வருவதால் நகராட்சி அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் காலை, மாலை இரு வேளைகளிலும் தேவையான அளவு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், கிணறு, கைப்பம்பு போன்ற நீர் ஆதாரங்களை மக்கள் மறந்தனர். நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரை மட்டுமே நம்பியுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக குடிநீர் கலங்கலாக வருகிறது. கழிவுநீர் கலந்து இருக்குமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் நகராட்சி அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

குடிநீர் கலங்கலாக வருவதற்கான காணத்தை கண்டறிந்த அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us