/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது விநியோக குறைதீர்வு முகாம் மாவட்டத்தில் நாளை ஏற்பாடு
/
பொது விநியோக குறைதீர்வு முகாம் மாவட்டத்தில் நாளை ஏற்பாடு
பொது விநியோக குறைதீர்வு முகாம் மாவட்டத்தில் நாளை ஏற்பாடு
பொது விநியோக குறைதீர்வு முகாம் மாவட்டத்தில் நாளை ஏற்பாடு
ADDED : பிப் 06, 2025 11:14 PM
கடலுார்: கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை பொதுமக்கள் பெறும் வகையில் மாதந் தோறும் 2வது சனிக்கிழமை குறைதீர்வு முகாம் நடக்கிறது. அதன்படி, இம்மாதத்திற்கான குறைதீர்வு முகாம் நாளை 8ம் தேதி காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
வட்ட வழங்கல் அலுவலர்கள் கடலுார்-ஜெயக்குமார், பண்ருட்டி-ராஜலிங்கம், குறிஞ்சிப்பாடி-கந்தவேல், சிதம்பரம்-சித்ரா, காட்டுமன்னார்கோவில்-அன்புராஜ், புவனகிரி-அம்பேத்கர் ராஜ், விருத்தாசலம்-அனுசுயா, திட்டக்குடி- மஞ்சுளா, வேப்பூர்-சாந்தி, ஸ்ரீமுஷ்ணம் -தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையில் அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடக்கிறது.
முகாமில், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும். மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்கான அங்கீகாரச் சான்று கோரி மனு அளிக்கலாம். அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் மனுவாக அளிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.