/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
/
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
ADDED : ஏப் 09, 2025 07:05 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் வரும் 12ம் தேதி நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில், மாதந்தோறும் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் வரும் 12ம் தேதி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடக்கிறது.
அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் குறைதீர்வு அலுவலர்கள் இப்பணியை மேற்கொள்வர். அந்தந்த வட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் நடக்கும் முகாமில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
கைரேகை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகார சான்று கோரி மனு அளிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.