/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 09, 2024 06:35 AM
பெண்ணாடம், : பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த வேண்டும் என வார்டு மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அதிகளவு சாதாரண மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சியின் எல்லைகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பேரூராட்சி வார்டுகளில் உள்ள வடிகால் வசதிகள் போதுமானதாக இல்லை.
இதனால் மழை காலங்களில் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி, சாலைகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை.
பல வார்டுகளில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை காலங்களில் சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடும் அவலம் இதுநாள் வரை தொடர்கிறது.
எனவே, பெண்ணாடம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை ஏற்படுத்தவும், கழிவு நீர் சுத்திகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வார்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.