ADDED : செப் 19, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், பொது க்கள் கடும் அச்சமடைகின்றனர்.
பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சி 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. பிரதான சாலைகளில் கூட்டம், கூட்டமாக திரியும் நாய்கள், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சிறுவர்கள், பொது மக்களை துரத்தி கடிக்கிறது. மேலும், சாலையின் குறுக்கே செல்லும் நாய்கள் மீது வாகன ஓட்டிகள் மோதி, கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.
எனவே, பெண்ணாடத்தில் சாலையில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.