/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.முட்லுாரில் கன்னி திருவிழா பொதுமக்கள் குவிந்தனர்
/
சி.முட்லுாரில் கன்னி திருவிழா பொதுமக்கள் குவிந்தனர்
சி.முட்லுாரில் கன்னி திருவிழா பொதுமக்கள் குவிந்தனர்
சி.முட்லுாரில் கன்னி திருவிழா பொதுமக்கள் குவிந்தனர்
ADDED : ஜன 26, 2025 04:46 AM

கிள்ளை   சிதம்பரம் அருகே கன்னித் திருவிழாவை முன்னிட்டு நேற்று கன்னி சிலைகளை, பொதுமக்கள் ஊர்வலமாக தலையில் துாக்கிச்சென்று வெள்ளாற்றில் கரைத்தனர்.
சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் மழை வேண்டியும், கிராம மக்கள் நலன் மற்றும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், ஆண்டுதோறும் கன்னித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, காணும் பொங்கல் பண்டிகை அன்று ஒவ்வொரு வீட்டிலும், கல் நட்டு அதை கன்னியாக நினைத்து தினமும் பூஜை நடத்தப்பட்டது.  ஊரில் உள்ள 11 தெரு முனையிலும், அலங்கரிக்கப்பட்ட கன்னி சிலையை வைத்து, தினமும் பூஜைகள்செய்து வழிப்பட்டு வந்தனர். கன்னித் திருவிழாவான நேற்று, பூஜைகள் செய்யப்பட்ட  கன்னி சிலைகளை, ஒவ்வொரு தெருக்களில் இருந்துபொதுமக்கள் ஊர்வலமாக தலையில், துாக்கிச்சென்று வெள்ளாற்றில் கரைத்து வழிப்பட்டனர்.
விழாவில் பொதுமக்கள் திரளாக குவிந்தனர்.

