தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வெறிச்சோடிய அலுவலகம்

 பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வெறிச்சோடிய அலுவலகம்

 பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வெறிச்சோடிய அலுவலகம்


ADDED : மே 12, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 03:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு பின் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாததால் வெறிச்சோடியது.

வாரந்தோறும் திங்கள் கிழமை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்வர்.

பொதுமக்கள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து கலெக்டரை சந்தித்து மனுவாக வழங்குவர்.

அதன்படி கடலுார் மாவட்டத்தில் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கிட்டதட்ட 2 மாதங்களாக பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தேர்தல் முடிந்து முதல்வர் பதவி ஏற்றதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் வழக்கமான வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.

வாரந்தோறும் கூட்டமாக இருக்கும் கலெக்டர் அலுவலக வளாகம், மக்கள் வரவு இன்றி வெறிச்சோடியது. ஒவ்வொருவராக வந்து மனு அளித்து சென்றனர். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரியங்கா, சப் கலெக்டர் கிஷன்குமார், நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார ராஜா, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, விஷ்ணுபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us