/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்கள் குறைகேட்பு கூட்டம்: 540 மனுக்கள் மீது விசாரணை
/
மக்கள் குறைகேட்பு கூட்டம்: 540 மனுக்கள் மீது விசாரணை
மக்கள் குறைகேட்பு கூட்டம்: 540 மனுக்கள் மீது விசாரணை
மக்கள் குறைகேட்பு கூட்டம்: 540 மனுக்கள் மீது விசாரணை
ADDED : நவ 04, 2025 01:34 AM

கடலுார்:  கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
பொதுமக்களிடம் இருந்து 540 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் உதவித் தொகைக்கான ஆணையை 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.48,800 மதிப்பில் 5 காதொலி கருவிகள், தன் விருப்ப நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு மருத்துவ செலவிற்கு ரூ.16,000 த்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
குவைத் நாட்டில் தீ விபத்தில் இறந்த காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை குடும்பத்திற்கு அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து வரப்பெற்ற ரூ.12,64,050 இழப்பீட்டு தொகையை அவரது வாரிசுகளிடம் வழங்கப்பட்டது.
பணிகாலத்தில் இறந்த வருவாய்த் துறையை சேர்ந்த 5 அரசு அலுவலர்கள் மற்றும் பிற துறையை சேர்ந்த 11 அரசு அலுவலர்களின் வாரிசுதாரர்கள் 16 பேருக்கு கருணை அடிப்படையில் வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, தனித்துணை ஆட்சியர்  (ச.ப.தி.) தங்கமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும் உட்பட பலர் பங்கேற்றனர்.

