/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் 'பர்னிச்சர் எக்ஸ்போ 2024' பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

ADDED : அக் 26, 2024 06:43 AM

நெய்வேலி: நெய்வேலியில், தீபாவளி பண்டிகையையொட்டி துவங்கப்பட்ட 'பர்னிச்சர் எக்ஸ்போ 2024' ல் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, பர்னிச்சர் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
நெய்வேலியில், முதல் முறையாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'பர்னிச்சர் எக்ஸ்போ 2024' நேற்று முன்தினம் துவங்கியது. நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், ரெயின்போ நகரில், உள்ள கே.என்.டி., திருமண மஹாலில் 5 நாட்கள் நடக்கிறது.
28ம் தேதி வரை நடைபெறும் பர்னிச்சர் எக்ஸ்போவில், நிலம்பூர் டீக்வுட் கட்டில், சோபா, டைனிங், டில்லி லக்சுரி குஷன் சோபா, கம்பெட், ரிக்ளைனர் சோபா, பங்கர் காட், பெட்ரூம் செட் போன்ற அனைத்து விதமான பர்னிச்சர்களும், நேரடி உற்பத்தி விலையில், 30 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும். இக்கண்காட்சியயை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, பல்வேறு பர்னிச்சர் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர். எக்ஸ்போ ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அஜ்மல் மற்றும் சமீர், செயலாளர் அனீஷ் ஆகியோர் எக்ஸ்போ ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.