அதிகரிக்கும்‘மோசடி’ குறுஞ்செய்திகள் பொதுமக்களே உஷார்... உஷார்
அதிகரிக்கும்‘மோசடி’ குறுஞ்செய்திகள் பொதுமக்களே உஷார்... உஷார்
ADDED : செப் 08, 2026 07:43 PM
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கும் கும்பல்கள் நாளுக்கு நாள் புதிய உத்திகளை கையாண்டு வருகின்றனர். பொதுமக்கள் பலருக்கு வங்கி தொடர்பான செல்போன் அழைப்புகளில் உங்கள் சேமிப்பு தவணை தொகையை சரியாக செலுத்தவில்லை எனவும், போக்குவரத்து விதிமீறல் அபராதம் விரைவாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி இந்த லிங்கை பயன்படுத்தி தொகையை செலுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மேலும் உங்களது வங்கி கணக்கில் கே.ஒய்.சி., மற்றும் ஏ.டி.எம்., கார்டு காலாவதியாகிறது. எனவே உங்களது வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டுமனால் இந்த எஸ்.எம்.எஸ் லிங்கை பயன்படுத்தி புதுப்பித்து கொள்ளவும் என குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.
இந்த எஸ்.எம்.எஸ்., களை கிளிக் செய்தால் மோசடி நபர்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து மோசடி செய்து விடுவார்கள்.
எனவே, வங்கிகளில் இருந்து எஸ்.எம்.எஸ்., வந்தால் நேரடியாக வங்கிக்கு சென்று தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டும். விழிப்புடன் இல்லா விட்டால் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி ஆசாமிகள் திருடி விடுவார்கள் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.
