/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம் பொதுமக்கள் சாலை மறியல்
/
வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம் பொதுமக்கள் சாலை மறியல்
வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம் பொதுமக்கள் சாலை மறியல்
வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம் பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : டிச 08, 2024 05:26 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த சின்னபேட்டையில் பாரபட்சமாக வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி, அண்ணாகிராமம் அடுத்த சின்னபேட்டை ஊராட்சியில் 473 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமாக நிவாரணம் வழங்குவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:00 மணியளவில் திருத்துறையூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் 10:30 மணியளவில் கலைந்து சென்றனர்.