/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் அவதி
/
குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் அவதி
ADDED : ஜன 24, 2026 06:42 AM

சேத்தியாத்தோப்பு: -: சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை-கானுார் போக்குவரத்து சாலை, 3 கி.மீ., தொலைவு உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தார்சாலை போடப்பட்டுள்ளது. தற்போது இந்த சாலை, ஜல்லிகள் பெயர்ந்து செம்மண் சாலையாகவும் , ஆங்காங்கே குண்டும் குழியுமாகவும் மாறி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையில் அவசரத்தேவைகளுக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் உள்ளது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய தார்சாலை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

