/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கழிவுநீர் கால்வாய் பணி மந்தம் பொதுமக்கள் அவதி
/
கழிவுநீர் கால்வாய் பணி மந்தம் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 06, 2025 08:07 AM

ஸ்ரீமுஷ்ணம், ; ஸ்ரீமுஷ்ணத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணி மந்தமாக நடப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக 49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமான பணிகள் கடந்தாண்டு செப்., மாதம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் துவங்கியது.
பணிகள் துவங்கிய போதே ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக பிரச்னை உள்ள இடங்களை தவிர்த்து விட்டு மற்ற இடங்களில் கால்வாய் பணி நடந்தது. கால்வாய்கள் ஒரே நேராக தொடர்ச்சியாக கட்டாமல் பகுதி பகுதியாக அமைக்கப்பட்டதால் கழிவு நீர் செல் வழியின்றி தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.
குறிப்பாக, சன்னதி வீதி, கடை வீதியில் கட்டப்பட்ட கால்வாயில் இருந்து கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. கடைகள் மற்றும் வீடுகள் முன்பு தோண்டிய பள்ளங்கள் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆமை வேகத்தில் நடக்கும் கட்டுமான பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.