/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சேரி ஏற்றுமதி மைய தலைவர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு
/
புதுச்சேரி ஏற்றுமதி மைய தலைவர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு
புதுச்சேரி ஏற்றுமதி மைய தலைவர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு
புதுச்சேரி ஏற்றுமதி மைய தலைவர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு
ADDED : ஆக 15, 2025 03:30 AM

கடலுார்: புதுச்சேரி ஏற்றுமதி மேம்பாட்டு மைய தலைவர், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் சிராக் பாஸ்வானை சந்தித்தார்.
புதுச்சேரி ஏற்றுமதி மேம்பாட்டு மைய தலைவரும், பவானி மசாலா நிர்வாக இயக்குனருமான ஜெயசங்கர், டில்லி பஞ்ச்ஷீல் பவனில், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் சிராக் பாஸ்வானை சந்தித்தார்.
அப்போது ஏற்றுமதியாளர்கள் சார்பில், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கு ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை அமல்படுத்த வேண்டிய அவசியத்தையும், அது வணிக சீரமைப்பை எளிதாக்கி, ஏற்றுமதிக்கு ஆதரவாக இருந்து, தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதை எடுத்துரைத்தார்.
இந்திய உணவு பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்தும் பேசினார்.
மேலும் நாட்டின் பிற பகுதிகளில் இல்லாத உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகத்தை, விவசாயம், உணவு பதப்படுத்தல் தொழிலுக்கு சிறந்த கடலுார் மாவட்டத்தில் துவங்கவும் கோரிக்கை விடுத்தார். அப்போது ஏற்றுமதி மேம்பாட்டு மைய நிர்வாகிகள் உடனிருந்தனர்.