/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேவை சங்க கூட்டத்தில் புதுச்சேரி 'சரக்கு' சப்ளை; சொகுசு கார் மீது வழக்கு பதிவு
/
சேவை சங்க கூட்டத்தில் புதுச்சேரி 'சரக்கு' சப்ளை; சொகுசு கார் மீது வழக்கு பதிவு
சேவை சங்க கூட்டத்தில் புதுச்சேரி 'சரக்கு' சப்ளை; சொகுசு கார் மீது வழக்கு பதிவு
சேவை சங்க கூட்டத்தில் புதுச்சேரி 'சரக்கு' சப்ளை; சொகுசு கார் மீது வழக்கு பதிவு
ADDED : மே 27, 2025 11:23 PM
நெய்வேலி அருகே சேவை சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டத்திற்கு பின்பு 'சரக்கு பார்ட்டி' நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்ற ஒருவர் டைனிங் டேபிளில் இருந்த மதுபாட்டில்களை போட்டோ எடுத்து போலீசாருக்கு 'வாட்ஸ் ஆப்' பில் பகிர்ந்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரகசிய விசாரணை நடத்தினர். இந்த சரக்கு பார்ட்டிக்கு, புதுச்சேரியில் இருந்து வந்த மதுபாட்டில்களை வழங்கியது தெரிந்தது.
பார்ட்டி முடிந்த பின்னர், பார்ட்டி கொடுத்தவரை அழைத்துச்சென்று மதுபாட்டில்கள் எங்கே வாங்கினீர்கள் என போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் மதுபாட்டில்கள் யாரிடம் இருந்து எப்படி வாங்கப்பட்டது என்பதை தெளிவாக கூறினார். அதைத் தொடர்ந்து பார்ட்டி கொடுத்தவர் போலீஸ் விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதனால் அவர் நிம்மதியுடன் வீடு திரும்பினார். சில நாட்கள் கழித்து மீண்டும் போலீசில் இருந்து அவருக்கு போன் கால் அழைப்பு வந்தது. அவரும் போலீஸ் விசாரணைக்கு சென்றவுடன், சற்றும் எதிர்பாராமல், நீங்கள் உங்கள் காரில்தானே மதுபாட்டில்கள் கடத்தி வந்தீர்கள் என இன்ஸ்பெக்டர் ஒரு 'குண்டை' துாக்கி போட்டார்.
அதனால் நிலை குலைந்த அவர் என்ன, ஏது என்று கேட்பதற்குள் காரை போலீஸ் ஸ்டேஷன் எடுத்து வந்து விடு என்றார்.
வேறு வழியின்றி தனது சொகுசு காரை போலீசில் ஒப்படைத்தார். அந்த காரில் தான் மதுபாட்டில் கடத்தியதாக வழக்குப்பதிந்து காரை பறிமுதல் செய்தனர்.

