/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காய்கறி மூட்டைகளுடன் கடத்திய புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்
/
காய்கறி மூட்டைகளுடன் கடத்திய புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்
காய்கறி மூட்டைகளுடன் கடத்திய புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்
காய்கறி மூட்டைகளுடன் கடத்திய புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஜன 11, 2025 05:00 AM

விருத்தாசலம்: புதுச்சேரியில் இருந்து காய்கறி மூட்டைகளுடன் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
விருத்தாசலம் லுாகாஸ் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் பன்னீர், 58. இவருக்கு சொந்தமான டாடா ஏஸ் வேனை, எம்.புதுார் புது காலனி வேலு மகன் மணிகண்டன், 28, ஓட்டி வருகிறார். இந்நிலையில், புதுச்சேரி முள் ஓடை பகுதியில் இருந்து 50 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை, காய்கறி மூட்டைகளுக்கு இடையே கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்ட தனிப்படை போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாலக்கரை ரவுண்டானாவில் நிற்காமல் சென்ற வேனை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், காய்கறி மூட்டைகளுக்கு இடையே மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது உறுதியானது.
அதைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடத்தி வரப்பட்ட 40 ஆயிரம் மதிப்பிலான 215 மதுபான பாட்டில்கள், டாடா ஏஸ் வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பன்னீர், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.