ADDED : ஆக 29, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தவேல். இவரது மனைவி தனலட்சுமி, 30; இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனலட்சுமி, கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்த தனலட்சுமி திடீரென தூக்கிட்டு மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
