UPDATED : நவ 25, 2026 08:38 PM
ADDED : நவ 25, 2026 08:20 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: பெரியகண்டியங்குப்பம் நகராட்சி துவக்க பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் நகராட்சி 2வது வார்டு பெரியகண்டிங்குப்பத்தில் உள்ள நகராட்சி துவக்க பள்ளியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், மழைகாலங்களில் இந்த பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பெய்த திடீர் மழையில், பள்ளி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால், மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி, அந்த பகுதியை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
