/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெருமாள் கோவில்களில் புரட்டாசி வழிபாடு
/
பெருமாள் கோவில்களில் புரட்டாசி வழிபாடு
ADDED : செப் 28, 2025 07:57 AM

கடலுார் : புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையொட்டி, கடலுார் பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார், திருவந்தி புரம் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை, வைகுண்ட நாயகி, ஹேமபுஜ வல்லி தாயார் சமேத தேவநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதே போன்று, புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி, திருப்பாதிரிபுலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், எஸ்.பி., அலுவலகம் எதிரிலுள்ள கஜேந்திர வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.