/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்
/
வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்
ADDED : நவ 06, 2025 05:15 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் தெரு நாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தெரு நாய்களை பிடித்து, த டுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது.
சுகாதார ஆய்வாளர் முருகேசன் தலைமையில், 10 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நாய்களை வலை போட்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கால்நடை டாக்டர் மணிமாறன் மற்றும் பராமரிப்பு உதவியாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடனுக்குடன் நாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போட்டு, உடனடியாக விடுவித்தனர்.
ஊசி போடப்பட்ட நாய்களை அடையாளம் காணும் வகையில், வண்ணம் பூசப்பட்டது. நேற்று, 75 நாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடுப்பட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர்.

