ADDED : ஜன 30, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் புதுப்பாளையம் ஆருத்ரா ஹாலில், பக்த பஜனை மண்டலி சார்பில் வரும் பிப். 8ம் தேதி 40ம் ஆண்டு ராதா கல்யாண மகோத்சவ விழா நடக்கிறது.
விழாவை முன்னிட்டு வரும் பிப்., 7ம் தேதி காலை 7:30 மணிக்கு கணபதி பூஜை, 8:30 மணிக்கு அஷ்டபதி பஜனை, மாலை 5:30 மணிக்கு விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், மாலை 6:00 மணிக்கு ஜானவாசம் நடக்கிறது. தொடர்ந்து, 8ம் தேதி காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி, காலை 8:00 முதல் 12:00 மணி வரை தோடயமங்களம், திவ்யநாமம் மற்றும் அபங்கங்கள் நடக்கிறது.
இதையடுத்து, பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரை ராதா கல்யாண மகோத்சவ வைபவம் மற்றும் ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது.
