/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 18ம் தேதி ராதா கல்யாண மகோற்சவம்
/
கடலுாரில் 18ம் தேதி ராதா கல்யாண மகோற்சவம்
ADDED : பிப் 11, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் புதுப்பாளையம் ஆருத்ரா மண்டபத்தில், பக்த பஜனை மண்டலி சார்பில் வரும் 18ம் தேதி 38ம் ஆண்டு ராதா கல்யாண மகோற்சவ விழா நடக்கிறது.
அதை முன்னிட்டு, வரும் 17ம் தேதி காலை 7:30 மணிக்கு கணபதி பூஜை, 8:30 மணிக்கு அஷ்டபதி பஜனை, மாலை 5:30 மணிக்கு விஷ்ணு சஹஸ்ர நாமபாராயணம், மாலை 6:00 மணிக்கு ஜானவாசம் நடக்கிறது. தொடர்ந்து, 18ம் தேதி காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி, காலை 8:00 முதல் 12:00 மணி வரை தோடயமங்களம், திவ்யநாமம் மற்றும்அபங்கங்கள் நடக்கிறது.
இதையடுத்து, பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரை ராதா கல்யாண மகோற்சவ வைபவம் மற்றும் ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது.