தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில்வே கேட் பராமரிப்பு பணி : போக்குவரத்து மாற்றம்

 ரயில்வே கேட் பராமரிப்பு பணி : போக்குவரத்து மாற்றம்

 ரயில்வே கேட் பராமரிப்பு பணி : போக்குவரத்து மாற்றம்


ADDED : பிப் 07, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிள்ளை: ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடந்ததால், பஸ் போக்குவரத்து வேறு வழியாக மாற்றப்பட்டது.

கிள்ளை ரயில்வே கேட்டில் நேற்று பராமரிப்பு பணி நடந்தது. அதையொட்டி, சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையம், கிள்ளை மற்றும் முடசல் ஓடை பகுதிகளுக்கு சென்று வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள், சிதம்பரம் ஓ.பி., வழியாக சென்று, பெரியமதகு வழியாக பிச்சாவரம், கிள்ளைக்கு சென்று வந்தன.

மேலும், பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளை வழியாக சிதம்பரத்திற்கு சென்ற கார், வேன் மற்றும் பைக்குகள், பெரியமதகு வழியாக சிதம்பரத்திற்கு சென்று வந்தன.

இந்த போக்குவரத்து மாற்றம் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நீடித்தது. இதையடுத்து, வழக்கம்போல கிள்ளை ரயில்வே கேட் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப் பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us