/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெஞ்சுவலியால் ரயில்வே மேலாளர் திடீர் மரணம்
/
நெஞ்சுவலியால் ரயில்வே மேலாளர் திடீர் மரணம்
ADDED : ஜூலை 31, 2025 04:07 AM

கடலுார்: பண்ருட்டி அருகே திருத்துறையூர் ரயில் நிலைய மேலாளர் ராம்கேஷ் மீனா, பணியின்போது திடீர் நெஞ்சுவலியால் இறந்தார்.
ராஜஸ்தான் மாநிலம், கேரா கல்யாண்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜக்குராம் மீனா மகன் ராம்கேஷ் மீனா,47; கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே திருத்துறையூர் ரயில் நிலையத்தில் நிலைய மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்றிரவு 1:30 மணிக்கு தனது அலுவலக அறையில் பணியில் இருந்த போது நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார்.
அப்போது அங்கு பணியிலிருந்த பெண் ஊழியர் ராதேஷியாம், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவரை, அந்தியோதயா விரைவு ரயில் மூலம் ஏற்றி விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரயில் நிலைய டாக்டர்கள் பரிசோதனை செய்து, அவர் இறந்தது விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.