ADDED : செப் 21, 2026 04:01 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் ஸ்டேஷனில், மரக்கன்றுகள் நடப்பட்டன.
விருத்தாசலம் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப்படை துவக்க நாள் மற்றும் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பா.ஜ., இளைஞரணி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
நிலைய மேலாளர் சுனில்குமார் வேம்பு, புங்கன், நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார். முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன், பிரசார பிரிவு ராஜேந்திரன், நகர தலைவர் அருள்ஜோதி, நிர்வாகிகள் வினோத், செந்தில், முருகவேல், ஆகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, ரயில் நிலைய நடைமேடைகளில் இன்ஸ்பெக்டர் பிளமின்ராஜ் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், ரயில்வே பாதுகாப்புப்படையின் பணிகள் குறித்து விளக்கமளித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சப் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், நிறைமதி உடனிருந்தனர்.
