தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில்வே சுரங்க பாதை அளவீடு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

 ரயில்வே சுரங்க பாதை அளவீடு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

 ரயில்வே சுரங்க பாதை அளவீடு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு


ADDED : பிப் 19, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி, சுல்தான்பேட்டையில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில், ரயில்வே சுரங்கபாதை உள்ளது. ஆனால், இதில் வாகனங்கள் செல்ல முடியாது.

இந்நிலையில் இறந்தவர்களின் சடலத்தை பல கிலோமீட்டர் துாரம் சுற்றி எடுத்து செல்ல வேண்டியுள்ளது. அதனால், வாகனங்கள் செல்லும் வகையில், சுரங்கபாதையை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து விஷ்ணுபிரசாத் எம்.பி., மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்பேரில் நேற்று ரயில்வே உதவி கோட்ட பொறியாளர்கள் புவனேஸ்வர்,மகேந்திரன்,நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணராஜன் முன்னிலையில், இருபுறமும் 150 மீ., நீளத்துக்கு சுரங்க பாதையை மாற்ற அளவீடு செய்தனர்.

சுரங்கபாதையை மாற்றி அமைத்தால் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாது என அப்பகுதி மக்கள் சிலர், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேறு சிலர், இந்த சுரங்கபாதையை வாகனங்கள் செல்லும்படி மாற்ற வேண்டும் என, அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

அங்கு வந்த காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் திலகர், 'வரைபடத்தை கொடுங்கள். நாங்கள் விஷ்ணுபிரசாத் எம்.பி., முன்னிலையில் மக்களுடன் பேசி சுமூக தீர்வு காண்கிறோம்,' என்றார். அதையேற்று மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us