/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாதோப்பு பகுதி வயல்களில் தேங்கிய மழை நீர் ; குமார உடைப்பு மதகு மூலம் வெளியேற்றம்

ADDED : ஜன 09, 2024 07:04 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதியில் பெய்த கன மழையால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிகால் வாய்க்கால் மூலம் வெள்ளாற்றில் திறந்து விடும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பில் நேற்று முன்தினம் இரவிலிருந்து விடிய விடிய இடைவிடாது 15 செ.மீட்டர் அளவுக்கு கன மழை பெய்துள்ளது.
மழையால் மேற்கு பகுதியில் உள்ள சின்னகுப்பம், வீரமுடையாநத்தம், பெரியநற்குணம், பு.ஆதனுார், தட்டனோடை, தர்மநல்லுார், சின்னநற்குணம் பகுதி வயல்களிலிருந்து வெளியேறிய மழைநீர் ஆணைவாரி வாய்க்காலில் பெருக்கெடுத்தது. அதனை தொடர்ந்து ஆணைவாரி வாய்க்காலில் வந்த மழை நீர் வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் வந்தடைந்தது.
மழைநீர் கிராமங்களிலும் வயல்களிலும் தேங்கி சேதம் ஏதும் ஏற்படாத வகையில் பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான் தலைமையில் பாசன ஆய்வாளர் செந்தில் மற்றும் பணியாளர்கள் குமார உடைப்பு மதகில் ஷட்டர்களை திறந்து வாய்க்காலிலிருந்து வெள்ளாற்றில் தண்ணீரை திறந்து விடும் பணியில் ஈடுபட்டனர்.