தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கொத்தவாச்சேரியில் 43.மி.மீ., மழை பதிவு

கொத்தவாச்சேரியில் 43.மி.மீ., மழை பதிவு

கொத்தவாச்சேரியில் 43.மி.மீ., மழை பதிவு


UPDATED : நவ 25, 2026 08:54 PM

ADDED : நவ 25, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 08:54 PM ADDED : நவ 25, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 43.மி.மீ., மழை பெய்துள்ளது.

குமரிக்கடல் பகுதியிலிருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயலசீமா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு கேரளம், அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி ஆகியவை காரணமாக கடலுார் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக துாரல் மழை பெய்து வருகிறது.

கடலுார் மாவட்டத்தில் குறிப்பாக கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தசாலம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து அரை மணிநேரம் நல்ல மழை பெய்தது. இதனால் வீதிகளில் தண்ணீர் ஓடியது. பின்னர் அவ்வப்போது துாரல் மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு மி.மீ., வருமாறு:

கொத்தவாச்சேரி 43மி.மீ., புவனகிரி 29, குறிஞ்சிப்பாடி 22, அண்ணாமலை நகர் 14.4, பரங்கிப்பேட்டை 14.4, காட்டுமன்னார்கோவில் 12, சேத்தியாதோப்பு 11.4, குப்பநத்தம் 11, கடலுார் 10.6, சிதம்பரம் 10.2, கலெக்டர் அலுவலகம் 9.9, லால்பேட்டை 8, மேமாத்துார் 8, பண்ருட்டி 7, விருத்தாசலம் 7, பெலாந்துறை 6.4, வடக்குத்து 6, வேப்பூர் 5, வானமாதேவி 4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 43 மி.மீ., மழை பெய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us