/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர்: மக்கள் சாலை மறியல்
/
குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர்: மக்கள் சாலை மறியல்
குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர்: மக்கள் சாலை மறியல்
குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர்: மக்கள் சாலை மறியல்
ADDED : டிச 04, 2025 05:22 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பால், குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த சின்னமருங்கூர் புதுகாலனியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் வழியே செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்காலை தனிநபர்கள் ஆக்கிரமித்து விட்டனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு ஏரியில் இருந்து வெளியேறிய மழைநீர் முழுவதும் குடியிருப்பு களுக்குள் புகுந்தது.
இதனால், பொது மக்கள் விடிய விடிய மழைநீரை அப்புறப்படுத்திய நிலையில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நுழைந்ததால் அதிருப்தியடைந்தனர்.
இதைக் கண்டித்து, நேற்று மதியம் 1:00 மணியளவில், கருவேப்பிலங்குறிச்சி - மருங்கூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், 133 ஏக்கர் பரப்பளவில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியின் பாசன வாய்க்காலை தனிநபர்கள் ஆக்கிரமித்து விட்டதால், மழைநீர் முழுவதுமாக குடியிருப்புக்குள் நுழைந்து விட்டது.
குழந்தைகள், முதியோருக்கு விஷ ஜந்துக்களால் ஆபத்து அதிகரித்துள்ளது. மேலும், 200 ஏக்கரில் பாசனம் செய்துள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கி, அழுகும் அபாயம் உள்ளது.
அதனால், பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி, துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் .
இது தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் இளஞ்சூரியனிடம் போலீசார் மொபைலில் தகவல் தெரிவித்தனர். விரைவில் சீரமைத்து தருவதாக தாசில்தார் உறுதியளித்ததையேற்று, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

