/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீர்நிலைகளில் தேங்கிய மழைநீர்: நகராட்சி முயற்சிக்கு பலன்
/
நீர்நிலைகளில் தேங்கிய மழைநீர்: நகராட்சி முயற்சிக்கு பலன்
நீர்நிலைகளில் தேங்கிய மழைநீர்: நகராட்சி முயற்சிக்கு பலன்
நீர்நிலைகளில் தேங்கிய மழைநீர்: நகராட்சி முயற்சிக்கு பலன்
ADDED : டிச 03, 2024 06:37 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில் 2.40 கோடி ரூபாயில் துார்வாரப்பட்ட ஏரி, குளங்களில் மழைநீர் தேங்கியது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் 2.40 கோடி ரூபாயில் நாச்சியார்பேட்டை முத்து மாரியம்மன் கோவில் குளம் மற்றும் தாமரை குளம், பெரியார் நகர் நாச்சியார் குளம், வயலுார் மற்றும் பூதாமூர் குளங்கள் துார்வாரி, கருவேல மரங்கள், முட்புதர்களை அகற்றி, கரைகள் பலப்படுத்தப்பட்டன.
தற்போது, பெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் துார்வாரப்பட்ட ஏரி, குளங்களில் மழைநீர் முழுதுமாக தேங்கி கடல் போல காணப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக நகராட்சி துார்வாரியதால் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது.