/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : நவ 03, 2025 05:15 AM

கடலுார்: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கடலுார், டவுன் ஹால் அருகே, மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரசாரம் நடந்தது.
இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி மற்றும் மின்னணு பிரசார வாகனத்தினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதி நவீன மின்னனு வீடியோ வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு காணொலி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தமிழகமெங்கும் செயல்படுத்தும் பொருட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த வாகனத்தின் மூலம் நாளை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு கனவுத் திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
மழைநீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
இந்நிகழ்ச்சியில் குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமரன், நிர்வாக பொறியாளர்கள் மாரியப்பா, வினோத்ராஜா, தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

