UPDATED : நவ 27, 2026 10:12 PM
ADDED : நவ 27, 2026 10:12 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி மேலப்பாளையம் ஜான்டூயி நர்சரி பள்ளியில் நடந்தது.
போட்டியை நகராட்சி கமிஷ்னர் காஞ்சனா துவக்கி வைத்து, பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்களிடம் மழை நீர் சேகரிப்பு குறித்து பேசினார். மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினர். தொடர்ந்து கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சேர்மன் ராஜேந்திரன், கமிஷ்னர் காஞ்சனா பரிசுகள் வழங்கினர். நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார் செழியன், உதவியாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
