/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தரமற்ற புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தில் மழைநீர் கசிவு
/
தரமற்ற புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தில் மழைநீர் கசிவு
தரமற்ற புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தில் மழைநீர் கசிவு
தரமற்ற புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தில் மழைநீர் கசிவு
ADDED : டிச 03, 2024 06:33 AM
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பட்டீஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் பட்டீஸ்வரத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையில் உள்புறம் முழுதும் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் உள்பகுதியில் வைக்கப்பட்ட உணவு பொருட்கள் நனைந்தது. பழைய கட்டடம் பழுதடைந்துள்ளதால் தான் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த கட்டடத்திற்கு மின் இணைப்பு இதுவரை வழங்கவில்லை. பல அங்கன்வாடி கட்டடங்களுக்கு கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர்கள் மின் இணைப்பு பெற முயற்சிப்பதே இல்லை.
ஒன்றிய அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்து சீரமைத்து, விரைந்து மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.