/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராஜ்-ரமேஷ் ஓட்டல் நெய்வேலியில் திறப்பு
/
ராஜ்-ரமேஷ் ஓட்டல் நெய்வேலியில் திறப்பு
ADDED : ஆக 05, 2025 01:59 AM

கடலுார்: நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தில் ராஜ்-ரமேஷ் ஓட்டல் திறப்பு விழா நடந்தது.
ராஜ்-ரமேஷ் உணவக உரிமையாளர்கள் ராஜன், ரமேஷ் வரவேற்றனர். துபாய் அஜ்மல் ஸ்டீல்ஸ் அண்ட் பைப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கும்பகோணம் காவேரி ஸ்டீல்ஸ் நிறுவனர் ஷாகுல் அமீது, சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஓட்டலை திறந்து வைத்தார்.
எஸ்.பி., ஜெயக்குமார் குத்து விளக்கேற்றினார். உரிமையாளர்கள் ராஜ், ரமேஷ் ஆகியோரின் தந்தை ஓய்வு பெற்ற தீயணைப்பு அதிகாரி ராதாகிருஷ்ணனின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, காலை டிபன் 10 ரூபாய்க்கும், மதிய உணவு 10 ரூபாய்க்கும் வழங்கப்பட்டது.
விழாவில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

