ADDED : ஜூன் 14, 2026 09:32 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபர், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரான் சிங் மகன் லக் ஷ்மன் சிங், 27; விருத்தாசலம் ஆயியார்மடம் தெருவில் வாடகை வீட்டில் வசித்தபடி, ஜங்ஷன் சாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். தனியே வசித்து வந்த அவர், நேற்று காலை 11:00 மணிக்கு மேலாகியும் கடையை திறக்கவில்லை.
அவரது தந்தை ரான் சிங் பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் அதிர்ச்சியடைந்த அவர், மற்றொரு மொபைல் கடையில் பணிபுரியும் உறவினரான உமைத் சிங் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் சென்று பார்த்தபோது, வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் துாக்குபோட்ட நிலையில் லக் ஷ்மன் சிங் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சென்று, வாலிபரின் சடலத்தை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லக் ஷ்மன் சிங் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
