ADDED : பிப் 11, 2024 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, அம்பலவாணன் பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சாலையின் நடுவில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டார். போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர், அம்பலவாணன்பேட்டை, ரோட்டு தெருவை சேர்ந்த சங்கர் மகன் சசிக்குமார், 25, என, தெரியவந்தது.