/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
100 சதவீத வாக்குப் பதிவு வலியுறுத்தி பேரணி
/
100 சதவீத வாக்குப் பதிவு வலியுறுத்தி பேரணி
ADDED : மார் 17, 2024 05:35 AM

கடலுார்: கடலுாரில், நுாறு சதவீதம் வாக்குப் பதிவு வலியுறுத்தி,  மகளிர் சுய உதவிக் குழுவினரின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கடலுார் மாவட்ட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மஞ்சக்குப்பம் டவுன்ஹால் அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மகளிர் சுய உதவிக் குழு மகளிர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு பேரணி பாரதி சாலை, அண்ணா பாலம் வழியாக உழவர் சந்தை வரை சென்று முடிந்தது. ஊர்வலத்தில் மகளிர் வாக்களிப்பது அவசியம், தவறாது வாக்களிப்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட அட்டைகளை கையில் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும்  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட மகளிர் திட்டம் உதவி இயக்குனர் சுருதி, மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

