/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமநவமி
/
வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமநவமி
ADDED : ஏப் 05, 2025 05:20 AM
கடலுார்; திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று ராமநவமி உற்சவம் துவங்குகிறது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள கோதண்டராம சுவாமி சன்னதியில் நாளை 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை ராமநவமி உற்சவம் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, இன்று (5ம் தேதி) மாலை 5:00 மணிக்கு, ராமபிரானுக்கு திருமஞ்சன உற்சவம் நடக்கிறது.
தொடர்ந்து, 11 நாட்கள் உற்சவத்தில், தினந்தோறும் காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு ராமர் பட்டாபிேஷகம் நடக்கிறது.
17ம் தேதி மாலை 6:00 மணியளவில் ராமர் விடையாற்றி உற்சவம், 18ம் தேதி திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் செய்து வருகிறார்.