நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி முன்னிட்டு 16ம் தேதி ராமர் பட்டாபிஷேக விழா நடக்கிறது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம், வரும் 6ம் தேதி துவங்குகிறது. தினமும் காலை திருமஞ்சனம், இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது. 12ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 16ம் தேதி ராமர் பட்டாபிஷேக விழா, 17ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழுவினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.